முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாசின் கைதுக்கு மத முத்திரை குத்துவதா? பா.ஜ.க. கண்டனம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 1 - இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் கைது நடவடிக்கைக்கு மத முத்திரை குத்தி கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. யாசின் பட்கல் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான கமால் பரூக்கி, குற்றத்தின் அடிப்படையில் பட்கல் கைது செய்யப்பட்டாரா? அல்லது மதத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன் இஸ்லாமியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவும் பட்கல் கைதை விமர்சித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதீய ஜனதாவின் செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பதக், சிறுபான்மையினர் வாக்குகளைக் கவருவதற்காக இப்படி தரம்தாழ்ந்து பேசுவதை சமாஜ்வாடி கட்சி நிறுத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்