முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி பாலியல் வழக்கு: சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.1 - டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறார் சீர்திருத்த கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி 23 வயதுடைய மருத்துவ மாணவியும் அவரது நண்பரும் பஸ்சில் ஏறியுள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் நண்பனை அடித்து கட்டிப்போட்டுவிட்டு மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சுயநினைவு இழந்த நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அந்த மாணவி அனுமதிக்கப்பட்டால் அங்கு சிகிச்சை பலனிளிக்காததால் உயர் சிகிச்சைக்காக விமானம் மூலம் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் சிகிச்சை பலனின்றி மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் தலைநகர் டெல்லி மட்டுமல்லாது நாடே கொதித்தெழுந்தது. டெல்லியில் ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் கூடி 10 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லி நகரமே முடங்கிப்போனது. ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும் முயன்றனர். நாடு முழுவதும் சமூக நல அமைப்புகளும், பெண்கள் நல சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். 

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 6 பேர்களை போலீசார் கைது செய்து வழக்கப்பதிவு செய்தனர். இதில் பஸ் டிரைவர், கிளீனர் ஆகியோரும் அடங்குவர். கைது செய்யப்பட்ட 6 பேர்களில் ஒருவன் 17 வயது சிறுவனாக இருந்ததால் அவன் மட்டும் சிறார் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான். மீதிப்பேர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டான். இவர்கள் மீது டெல்லி விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டியிருக்கிறது. இந்தநிலையில் அந்த 5 பேர்களில் ஒருவர் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். மீதி 4 பேர் டெல்லி விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை விரைவில் முடியும் என்று தெரிகிறது. அதேசமயத்தில் சிறுவன் மீது சிறார் சீர்திருத்த கோர்ட்டில் வழக்கு விசாரணை கடந்த மாதமே முடிந்துவிட்டது. விசாரணை முடிவில் சிறுவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். ஆனால் தண்டனை மட்டும் அறிவிக்கப்படாமல் 3 தடவை தள்ளிவைக்கப்பட்டது. சிறார் வயது வரம்பு குறித்து வழக்கு ஒன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்காமல் இருப்பதால் தண்டனை வழங்குவதை சிறார் சீர்திருத்த கோர்ட்டு தள்ளிவைத்து வந்தது. தண்டனை வழங்க சிறார் சீர்திருத்த கோர்ட்டுக்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டதால் அந்த சிறுவனுக்கு நேற்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 ஆண்டுகளை சிறார்களுக்கான சீர்திருத்த சிறையில் அந்த சிறுவன் அடைக்கப்படுவான். சிறுவனுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று மருத்துவ மாணவியின் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். வேறுபல சமூக அமைப்புகளும் மகளிர் சங்கங்களும் சிறுவனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்