முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நொய்டாவில் நண்பரை தாக்கி பெண் கற்பழிப்பு: 4 பேர் கைது

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

நொய்டா, செப். 2 - மும்பையை போல் நொய்டாவிலும் நண்பரை தாக்கி பெண்ணை கற்பழித்த போலீசார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் சில நாட்களுக்கு முன்பு நண்பருடன் சென்ற போட்டோகிராபரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நண்பரை தாக்கி கட்டிப் போட்டு விட்டு இந்த கொடூர செயல் நடத்தப்பட்டது. இது போல் டெல்லி அருகே உள்ள செயற்கை கோள் நகரமான நொய்டாவிலும் கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. 

நிலம் வாங்குவது தொடர்பாக நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் இணையதளம் மூலம் தொழிலதிபர் ஒருவரை தொடர்பு கொண்டார். இருவரும் நண்பர்களானார்கள். நிலத்தை பேசி முடிப்பதற்காக நொய்டாவில் உள்ள தொழிலதிபரின் குடியிருப்புக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல் கதவை உடைத்து அந்த வீட்டிற்குள் புகுந்தனர். அந்த வீட்டில் இருந்த தொழிலதிபரை கட்டிப்போட்டனர். பின்னர் அந்த 5 பேரும் அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்தனர். முன்னதாக அவர்களுக்கு உடன்பட மறுத்ததால் அந்த பெண்ணையும் தாக்கி அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டையும் பறித்து கொண்டனர். ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 3 ஆயிரம் பணம் எடுத்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு தப்பியோடி விட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் செயல்பட்டு கற்பழிப்பில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்கள் உட்பட 4பேரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவரான பண்டி, தொழிலதிபர் வீட்டின் அருகே வசிக்கிறார். இவர் போலீஸ் பயிற்சி முடிந்து விரைவில் வேலையில் சேரவிருந்தாராம். இவர்தான் தொழிலதிபர் வீட்டில் பெண் செல்வதை பார்த்து விட்டு தனது நண்பர்களான 2 போலீஸ்காரர்களை அங்கு வரவழைத்ததோடு மேலும் 2 நண்பர்களை வரவழைத்து 5 பேரும் கற்பழிப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தலைமறைவான மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் உ.பி.யிலும், டெல்லியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago