முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் அரசு ஊழியர்கள் 95 சதவீதம் பேர் ஸ்டிரைக்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

நகரி, செப்.2 - ஆந்திராவை பிரிந்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 32 வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. பஸ்கள் ஓடவில்லை. மக்களின் உணர்வுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 12 ம் தேதி முதல் சீமாந்திரா பகுதி அரசு ஊழியர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் குதித்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் அரசு துறைகள் இன்று வரை செயல்படவில்லை.

ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 12.48 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் மட்டும் 7.20 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் 95 சதவீதம் பேர் கடந்த மாதம் 12ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ்ஈடுபட்டு உள்ளனர். அதாவது 6.90 லட்சம் பேர் முழுமையாக வேலைக்கு வரவில்லை. அதிலும் ராயலசீமா பகுதியில் 100 சதவீதம் அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அனைவருக்கும் கடந்த மாதம் (ஆகஸ்டு) சம்பளம் வழங்கப்படவில்லை. மாத தொடக்கத்தில் வேலை பார்த்த 12 நாள் சம்பளமும் கிடைக்கவில்லை.

தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தலைமை செயலகத்தில் ஆந்திரா பகுதி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ்ஈடுபட்டாலும் தெலுங்கானா பகுதி அரசு ஊழியர்கள் 1800 பேர் பணிக்கு வந்தனர். சம்பள பில் தயாரிக்கும் பணி நடப்பதால் தலைமை செயலக ஊழியர்களுக்கு மட்டும் கடந்த மாதம் சம்பளம் கிடைக்கும் எனத்தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்