முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலவரத்துக்கு மோடியை குற்றம் சாட்டுவது நியாயமற்றது

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 2 - 2002 ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனக் கலவரம் துரதிஷ்டவசமானது என்று பா.ஜ.கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். மேலும் இந்த இனக் கலவரத்துக்கு நரேந்திர மோடியை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்றும் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். 

புது டெல்லியில் நேற்று பா.ஜ.க. சிறுபான்மை அணியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் பேசினார். அப்போது குஜராத் கலவரம் பற்றி அவர் குறிப்பிட்டார். இந்த கலவரம் துரதிஷ்டவசமானது என்று கூறிய ராஜ்நாத்சிங், அதே வேளையில் இந்த கலவரத்துக்கு முதல்வர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்றும் கூறினார். 

மேலும் காங்கிரசும் சில இதர கட்சிகளும் நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்துகின்றன என்றும் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டினார். குஜராத் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்று. எனவே அங்கு நடந்த இனக் கலவரம் துரதிஷ்டவசமானது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். யார்தான் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மோடியை குற்றம் சாட்டத்தான் முயற்சிகள் நடக்கின்றன. ஏதே அவர் திட்டமிட்டு செய்ததாக செய்திகள் பரப்பப்படுகின்றன என்றும் ராஜ்நாத்சிங் வேதனையோடு கூறினார். 

பா.ஜ.க ஆட்சியில் பாகுபாடு நடந்ததாக உணர்கிறீர்களா? என்று மாநிலத்து முஸ்லீம்களை மக்கள் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ்காரர்களை போல பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிக்கிறது என்றும் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டினார். காங்கிரசும், வேறு சில அரசியல் கட்சிகளும் நமது நாட்டில் பிரிவினை விதையை தூவ முயற்சிக்கின்றன என்றும் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டினார். பிரித்தாளும் கொள்கையை நாம் என்றும் பின்பற்றியதில்லை என்றும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்