முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆத்ம கவுரவ யாத்திரை: சந்திரபாபு நாயுடு தொடங்கினார்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, செப்.2 - ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி, ஆத்ம கவுரவ யாத்திரையை சந்திரபாபு நாயுடு தொடங்கினார். தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கடலோர, ஆந்திர ராயலசீமா பகுதிகளில்  போராட்டங்கள் நடந்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுமக்களிடையே சென்று ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தியும், அவர்களது குறைகளைக் கேட்டறியவும் ஆத்ம கவுரவ யாத்திரையை சந்திரபாபு நாயுடு தொடங்கினார்.

அவரது மனைவி புவனேஸ்வரி ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தெலுங்கு

மொழி பேசும் அனைவரும் ஒன்றே என்று கூறும் வகையில் தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ராமராவ் தொடங்கினார். அதன்  பின்னர் எனது ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன். காங்கிரஸ் ஆட்சியில் நான் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. பொது மக்களுக்காக போராட்டம் நடத்தவே ஆத்ம கவுரவ யாத்திரையை தொடங்கி உள்ளேன் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்