ஹேமமாலினியின் சொத்து 5 கிலோ தங்கம், 4 வீடுகள் மட்டுமே!

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      சினிமா
hema-malini

 

பெங்களூர்,பிப்.23 - மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த உறுதிமொழியில் ரூ 35 கோடி மதிப்பில் 4 வீடுகளும், 5 கிலோ தங்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 22 கேரட்டில் 3,779 கிராம் தங்கம், 18 கேரட்டில் 969.86 தங்கம், 25.51 கிலோ வெள்ளி, 116.850 கேரட் வைரம் இருப்பதாகவும் அவற்றின் மதிப்பு ரூ 1.39 கோடி என்றும் தெரிவித்துள்ளார். வட்டி பங்குகள் மூலம் ரூ 23 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தவிர ரூ 35 கோடி மதிப்புள்ள 4 வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரூ 17 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். மும்பை ஜூஹூ கடற்கரையில் 800 சதுர அடி வீடும் இதில் அடங்கும். இந்தி திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற ஹேமமாலினி பள்ளிக்கூடத்தில் 10 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: