முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப்.2 -  சிரியாவிலிருந்து வெளியேற,இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். 

கடந்த மாதம் டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் சிரியா நாட்டு ராணுவம் ரசாயன வெடிகுண்டு வீசி தாக்கியதில் 1400 பேர் இறந்தனர். இதில் அப்பாவி பொதுமக்கள் இறந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டி  வருகிறது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து சிரியா மீது போர் தொடுப்பதிலிருந்து இங்கிலாந்து பின்வாங்கியது. ஆனால் ராணுவ தாக்குதல் நடத்த பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். சிரியா மீது ராணுவ நடவடிக்கை அவசியமானது.  ரசாயன தாக்குதலுக்கு எதிரான உலகத்தின் கடமையை நாம் நிறைவேற்றியாக வேண்டும். எந்த வகையான தாக்குதல் என்பது பற்றிஇன்னும் முடிவு செய்யப்படவில்லை.  காங்கிரஸ் சபையின் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தும் நிலை உள்ளதால் இந்கியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்