முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பா. மசோதாவை அ.தி.மு.க எதிர்க்கும்: மைத்ரேயன்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.3 - உணவு பாதுகாப்பு மசோதாவை அ.தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும் என்று பாராளுமன்ற ராஜ்யசபையில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பேசினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு மசோதாவை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த மசோதா பாராளும்ன்ற லோக்சபையில் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது. நேற்று இந்த மசோதா ராஜ்ய சபையில் தாக்கல் செய்ய்ப்பட்டது. மசோதா மீதான விவாதத்தை பா.ஜ.க. தலைவர்க்ளில் ஒருவரான அருண் ஜேட்லி துவக்கி வைத்து பேசினார். அவரை தொடர்ந்து மாயாவதி போன்ற தலைவர்கள் பேசினார்க்ள். பிறகு அதிமுக எம்.பி.மைத்ரேயன் பேசினார். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான காரண்ங்களை மைத்ரேயன் எடுத்துரைத்தார். அவர் மேலும் பேசியபோது இந்த மசோதா மாநில்ங்களின் நிதிச்சுமையை அதிகரிப்பதாக உள்ளது. என்று குற்றம் சாட்டினார். தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மசோதாவுக்கு தமிழ் நாட்டை  சேர்ந்த மத்திய அமைச்சர்கள் எப்படி ஒப்புதல் அளித்தார்கள். என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மசோதாவை அதிமுக தொடர்ந்து எதிர்க்கும் என்றும கூறிய அவர் மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு குறுக்கிடக் கூடாது. என்றும் கேட்டுக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார். இதேபோல் திமுகவினரும் கூச்சலிட்டனர். பாராளுமன்றத்தில் கடும வாக்குவாதமே நடைபெற்றது. அடுத்த பேசிய கனிமொழி எம்.பி. இந்த மசோதா மக்களுக்கு பலன் அளிக்கும் என்று காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கி பேசினார். இதே போல் கச்சத்தீவு பிரச்சனையும் சபையில் எதிரொலித்தது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு செய்த துரோகத்தை மைத்ரேயன் புட்டு புட்டு வைத்தார். டி.ராஜா போன்றவர்களும் கச்சத்தீவு பிரச்சனையை எழுப்பி பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago