முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணை பலமாகவே உள்ளது: தமிழகம் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.3 - முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பலமாகவே உள்ளது. என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காவிரி பிரச்சினையில் அவர் வெற்றிக்கொடி நாட்டியதைப்போல இந்த பிரச்சினையிலும் அவ்ருக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ள தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் இந்த உத்தரவை கேரளம் மதிக்கவில்லை. மாறாக தனது மாநில சட்டசபையில் புதிய அணை கட்டப்போவதாகவும் தீர்மானம் கொண்டு வந்தது கேரளா. இதனிடையே இந்த அணையை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு அணை பலமாகவே உள்ளது என்று குறிப்பிட்டு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இதையும் கேரளா ஏற்கவில்லை. இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக இறுதிக்க்ட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி லோதா கூறுகையில், 

இந்த விவாதங்கள் குறித்த சுருக்கத்தை பத்து பத்து அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் தனது அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் அணை அனைத்து வகையிலும் பலமாகவே உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளம் இடையூறு செய்யக்கூடாது என உத்தரவிடவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அணை விஷயத்தில் தமிழகத்திற்கு அனைத்து உரிமைக்ளும் உள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago