முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு திருப்தி - ஜெயலலிதா

திங்கட்கிழமை, 9 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.10 - வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் ஆணையம் செய்துள்ள சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிக்கிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி 1 மாத காலம் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் முடிந்த பின்னர் கொடநாடு புறப்பட்டு சென்றார்.

கொடநாட்டில் அடுத்த கட்ட செயல்பாடு சம்பந்தமாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனையும், அன்றாட கட்சி பணிகளையும் கொட நாட்டிலிருந்து ஜெயலலிதா ஆற்றி வந்தார். 

இந்நிலையில் நேற்று கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள்  கனிமொழி  ஜாமீன் மனு குறித்து கேள்வி எழுப்பியபோது அது பற்றி பதிலளித்த ஜெயலலிதா, வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளதால் கோர்ட் விசாரணைக்கு பிறகு முடிவு சொல்வதாக கூறினார். கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்விக்கு வரும் 14-ம் தேதி அதுபற்றி முடிவு சொல்வதாக கோர்ட் அறிவித்துள்ளதால் வரும் தேர்தல் முடிவு அறிவித்த பிறகும், 14-ம் தேதி கோர்ட் முடிவு அறிவித்த பிறகுதான் பதிலளிப்பதாக கூறினார்.

வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் கமிஷன் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு வாக்கு எண்ணும் மையங்களிலும் எண்ணிக்கையின்போது அளிக்கும் பாதுகாப்பு திருப்தி அளிக்கிறது என்று தேர்தல் கமிஷன் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று கூறினார்.

தங்களுடைய இலக்கு என்ன என்ற கேள்விக்கு வரும் மே.13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிவுகள் வரும் அதன் பிறகு உங்களுக்கு அது பற்றி கூறுகிறேன் என்று கூறினார். ஜெயலலிதா பின்னர் போயஸ் இல்லத்திற்கு புறப்பட்டுச்சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் ஜெயலிலதாவை மதுசூதனன், பொன்னையன், செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், செம்மலை, மைத்ரேயன், சைதை துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மற்றும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு நின்று கோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.

போயஸ் இல்லத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஜெயலலிதா ஆலோசனை நடத்த உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்