முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேதமடைந்த ஏழுமலையான் திருப்பாதம் சீர்செய்யப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, செப். 3 - சேதமடைந்த நிலையில் காணப்படும் திருமலை பாதங்கள் மண்டபம் பகுதியில் உள்ள ஏழுமலையான் இடதுபாதத்தின் பெருவிரல் (வலது) உடைந்த பாதத்தை ஒட்டும் ஊழியர்.

திருமலையில் உள்ள ஏழுமலையானின் சேதமடைந்த திருப்பாதம் ஒட்டப்பட்டது.

திருமலையிலேயே மிக உயரமான பகுதியான நாராயணகிரி மலைப்பகுதியில் முதன் முதலில் ஏழுமலையான் தன் பாதங்களை பதித்த இடத்தில் தேவஸ்தானம் திருபாதங்களை நிர்மாணித்து பராமரித்து வருகிறது. இதை தரிசிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட தனியாக இடத்தை திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள ஏழுமலையான் திருப்பாதங்களில் கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் பக்தர்கள் தேங்காய் உடைத்ததால் இடது பாதத்தின் பெருவிரல் சேதமடைந்தது. இதை தேவஸ்தான ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒட்ட முயற்சி செய்தனர். இதுகுறித்த தகவல் ஊடகங்களுக்கு தெரிய வந்தததால் உடனே தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பக்தர்கள் அறியாமல் செய்ததால் இவ்வாறு நிகழ்ந்தது. இதனால் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாது. பக்தர்கள் கவலை கொள்ள வேண்டாம். இது குறித்து தேவஸ்தான ஆகம பண்டிதர்கள் மற்றும் தேவஸ்தான தலைமை அரச்சகரிடம் கலந்துரையாடி வருகிறோம். தற்சமயம் அந்த சேதம் தெரியாமல் இருக்க ஒட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்