இந்து மகாசபா அமைப்பு மீது எஸ்.வி.சேகர் புகார்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப். 3 - இந்து மகாசபா அமைப்பு மீது  நடிகர் எஸ்.வி.சேகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். எஸ்.வி.சேகர் தனது மகன் அஸ்வின்சேகருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நடிகருமான எஸ்.வி.சேகர் மேடை நாடகங்களையும் நடத்தி வருகிறார்.

மகாபாரத்தில் மங்கத்தா என்ற என்னுடைய நாடகம் 1980-ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை மாநகரம் முழுவதும் எனது போட்டோவுடன் தரைக் குறைவாக விமர்சித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இது என்னை மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகார் மனுவுடன் மகாபாரத்தில் மங்காத்தா சி.டி.களையும், தன்னை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர் அடங்கிய சி.டி.க் களையும் அவர் வழங்கினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: