முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முலாயம் மீதான சொத்து குவிப்பு வழக்கு கைவிடப்படுகிறது

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப். 3 - சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரது மகன் உத்தப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கை சி.பி.ஐ கைவிட முடிவு செய்துள்ளது. 

முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் இந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறது. அப்போது இருவர் மீதான சொத்துக் குவிப்பு புகாருக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை கைவிட சி.பி.ஐ. திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 

2005ஆம் ஆண்டு விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு 2007ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ, இந்த வழக்கை காரணம் காட்டியே நெருக்கடியான நேரங்களில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெற்று வந்தது. தற்போது ஒட்டுமொத்தமாக வழக்கையே சி.பி.ஐ. மூலம் கைவிடவும் முடிவு செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்