முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வில் மாணவி கே.ரேகா மாநிலத்தில் முதலிடம்

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.10 - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று ஓசூர் மாணவி கே. ரேகா மாநிலத்திலேயே முதலாமிடத்தை பெற்றுள்ளார். இவர் ஓசூரில் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இவர் மொத்தம் 4 பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 195 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 195 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். ஆக மொத்தம் இவர் பெற்ற மதிப்பெண்கள் 1190 ஆகும். தன்னுடைய வெற்றிக்கு காரணம் பள்ளி நிர்வாகமும், பிரின்சிபாலும் தான் என்று ரேகா கூறினார். ஆசிரியர்கள் நடத்திய பிரார்த்தனையும் காரணம் என்று கூறிய அவர், தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது சகோதரி நல்ல ஆதரவு கொடுத்ததாகவும் கூறினார். மருத்துவ படிப்பு படிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். 

 

கள்ளக்குறிச்சி, வேல்முருகன்:

 

பிளஸ் 2 தேர்வில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த எஸ். வேல்முருகன் என்பவர் 1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2 ம் இடத்தை தட்டிச் சென்றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இவரும் தன்னுடைய வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தந்த ஊக்கமே காரணம் என்று பூரிப்போடு தெரிவித்தார். தனது பிரின்சிபாலுக்கும் இவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவர் ஆங்கிலத்தில் 194, தமிழில் 194, உயிரியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கு இவரது நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

 

4 பேர் மூன்றாமிடம்:

 

பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் மூன்றாமிடத்தை 4 பேர் தட்டி சென்றுள்ளனர். இந்த 4 பேரும் 1200 க்கு 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:

திருநெல்வேலி மகராஜா நகர் ஜெயேந்திர சரஸ்வதி சில்வர் ஜூப்லி மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றவர் டி. வித்யா சகுந்தலா. இவர் பெற்ற மதிப்பெண்கள் 1186. இதே போல் பெரியகுளம் முத்துத்தேவன் பட்டியில் உள்ள டி.எம். ஹெச். என்.யு. மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றவர் என். ரகுநாத். இவர் பெற்ற மதிப்பெண்களும் 1186. அடுத்து நாமக்கல் குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் பி. சிந்துகவி என்ற மாணவியாவார். இவரும் 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நான்காவதாக ஓசூரில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி பி.எஸ். ரேகா ஆவார். இவரும் 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆக, மேற்கண்ட 4 மாணவ, மாணவிகளும் 1186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை தட்டி சென்றுள்ளனர். இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பயின்ற 2 மாணவிகளும் சாதனை படைத்துள்ளனர். 1190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த கே. ரேகாவும் இதே பள்ளியில் பயின்றவர். இதே பள்ளியில் பயின்ற பி.எஸ். ரேகாவும் 1186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் தாங்கள் படித்த பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மாணவி சந்தியா சாதனை:

 

பிளஸ் 2 தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து சாதனை செய்த மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி பிற மொழி பாடங்களையும் முதல் பாடமாக எடுத்து சில மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையை சேர்ந்த கே. சந்தியா என்ற மாணவி 1200 க்கு 1191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஓசூர் ரேகாவை விட இவர் ஒரு மதிப்பெண் அதிகமாக பெற்றாலும் சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்ததால் இவருக்கு முதலாமிடம் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. இருப்பினும் 1191 மதிப்பெண்கள் பெற்று இவர் படைத்த சாதனையையும் மறுப்பதற்கில்லை. இதே போல் தென்சென்னை டி.நகரை சேர்ந்த வி.ஆர். ஜெயப்பிரதா என்ற மாணவி 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஓசூர் ரேகாவுக்கு சமமாக இவர் மதிப்பெண்கள் பெற்றாலும் இவருக்கும் முதலிடம் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. காரணம் இவர் பிரஞ்சு பாடத்தை முதல் பாடமாக எடுத்து பயின்றவர். செங்கல்பட்டு கீழக்கட்டாளை பள்ளியில் பயின்றவர் மகாலெட்சுமி. இவரும் 1189 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பிரஞ்ச் மொழியை முதல் பாடமாக எடுத்து பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் தமிழகம் முழுவதும் மாணவிகள் வழக்கம் போல் மாணவர்களை மிஞ்சி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago