முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் பிரதமர்: பா.ஜ.க.

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

இந்தூர், செப். 3 ​- பிரதமர் மன்மோகன் சிங், தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் என்று பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பு. அவர் தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் ஆவார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் தோல்வியடைந்து விட்டனர். எனது கண்ணோட்டத்தில் அவர்கள் பொருளாதார நிபுணர்களே இல்லை. அல்லது பயனற்ற, மோசமான பொருளதார நிபுணர்கள் என்று கூறலாம். நாட்டை ஆளும் உரிமையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இழந்து விட்டது. தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்றவை நாட்டின் நிதி நிலை மோசமடைவதற்கு வழிவகுக்கும். இவற்றால் பணவீக்கம் உயரும் என்றார் முரளி மனோகர் ஜோஷி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்