முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.எஸ். ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் பெடரர் தோல்வி

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க்,செப்.4 - யு.எஸ். ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், 19வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் டொம்மி ரோபர்ட்டோவிடம் 6ரூ7, 3ரூ6, 4ரூ6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஸ்பெயினின் டேவிட் பெர்ரர் 7ரூ6, 3ரூ6, 7ரூ5, 7ரூ6 என்ற கணக்கில் ஜன்கோ டிப்சார்விக்கை (செர்பியா) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் பிரிவில் இத்தாலியின் ரோபர்ட்டா வின்சி 6ரூ4, 6ரூ2 என்ற கணக்கில் சகநாட்டின் கேமிலாவையும், டேனிலா ஹன்ட்சோவா(சுலோவேக்கியா) 6ரூ3, 5ரூ7, 6ரூ2 என்ற கணக்கில் அலிசன் ரிஸ்கியையும் (அமெரிக்கா), பிளவியா பெனட்டா (இத்தாலி) 6ரூ2, 7ரூ6 என்ற கணக்கில் சிமோனாவையும் (ருமேனியா) வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தனர்

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் திவிஜ் ஷரன் (இந்தியா) ரூசன் லு(தைபே) ஜோடி 6ரூ7, 3ரூ6, 3ரூ6 என்ற கணக்கில் குரேஷி (பாக்.)ரூஜூலியன் ரோஜர் (ஹாலந்து) ஜோடியிடம் தோல்வியடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்