முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை பிரச்சினை: மக்களவை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.4 -  பெட்ரோல் விலை உயர்வு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ்டுபட்டதால் மதியம் 3 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமானது குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என பா.ஜ.க உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இடதுசாரி உறுப்பினர்கள் அவையின் மையபகுதிக்கு சென்று, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். 

தெலுங்கு தேசம் உறுப்பினர் நமோ நாகேஸ்வர் ராவ் எழுந்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்தீப் தீக்ஷித், மதுயாக்ஷி கவுட் ஆகியோருக்கு எதிராக தான் கொடுத்துள்ள உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து பேச அனுமதிக்குமாறு கோஷம் போட்டார். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களும் சில பிரச்னைகளை எழுப்பினர். 

நாகேஸ்வர் ராவ் கொடுத்த உரிமை மீறல் நோட்டீஸ் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் மீராகுமார் தெரிவித்தார். இதே போல் தெலுங்கு தேசம் உறுப்பினர்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர் பூனம் பிரபாகர் கொடுத்துள்ள உரிமை மீறல் நோட்டீசும் பரிசீலனையில் இருக்கிறது என்றார். எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது.

இதையடுத்து அவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 12.01க்கு அவை கூடிய போது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திரிணாமுல் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பகல் 2 மணிக்கு தொடங்கிய அவையிலும் அமளி நீடித்ததால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்