முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் புயல்: 30,000 வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, செப். 4 - ஜப்பானில் கடும் புயல் தாக்கியதில் 30 ஆயிரம் வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. புயலில் சிக்கி 27 பேர் காயமடைந்தனர்.

ஜப்பானின் கிழக்கு பகுதியில் இந்தப் புயல் தாக்கியது. வடக்கு டோக்கியோவுக்கு அருகிலுள்ள கோஷிகயா நகரத்தில் பல இடங்களில் வீடுகள் இடிந்து போயின. வீட்டின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. புயலில் சிக்கி 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயலால் வீடுகளை இழந்தவர்கள் தங்குவதற்காக புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.புயலால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்