முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பாவை மீண்டும் பா.ஜ.க. வில் சேர்க்க கவுடா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

காந்திநகர், செப். 4 - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை மீண்டும் பா.ஜ.க.வில் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, நரேந்திர மோடியுடன் பேசியுள்ளார். காந்தி நகர் வந்த அவர் மோடியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார். இது கடந்த ஒரு மாதத்தில் 2 வது சந்திப்பாகும். தற்போது கவுடா கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். அவருடன் மேலும் 3 பேர் கொண்ட குழுவும் மோடியுடனான சந்திப்பின்போது உடன் இருந்தது. பின்னர் கவுடா கூறுகையில், கர்நாடக மாநில பா.ஜ.க. அரசியல் விவகாரம் தொடர்பாக பேசினோம். அதை வெளியில் சொல்ல முடியாது. லோக்சபா தேர்தல் எதிரொலியாக இந்த ஆலோசனை நடந்தது என்றார். எடியூரப்பா மறு வருகை குறித்தும் பேசினீர்களா என்ற கேள்விக்கு அதுகுறித்தும் பேசப்பட்டது. ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றார். 

கர்நாடகத்தில் ஊழல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து எட்டியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முதல்வராக அமர்ந்தவர் அவரது சீடராக கருதப்பட்ட கெளடா. இருப்பினும் தான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்று கடுப்பாகிப் போன எடியூரப்பா பா.ஜ.க. வை விட்டு விலகி புதுக் கட்சி தொடங்கினார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது கர்நாடகத்தில் பா.ஜ.க. அடியோடு காலி செய்யப்பட்டு விட்டதாலும், எடியூரப்பாவுக்கு இணையான தலைவர் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாலும், மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க முயற்சி நடக்கிறது. அதன் எதிரொலியாகவே கெளடா, மோடி சந்திப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்