முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் கையகப்படுத்துதல் மசோதா இன்று தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 4 - மக்களவையில் அண்மையில் நிறைவேறிய நிலம் கையகப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொழிற்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சாலைத் திட்டங்கள் போன்றவற்றுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்க வகை செய்யும் புதிய நிலம் கையகப்படுத்துதல் மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறியது. விவசாய நிலம் வலுக்கட்டாயமாக கையகம் செய்யப்படக் கூடாது என்பதையும் இந்த மசோதா உறுதிப்படுத்துகிறது.

இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்வது என்று இந்த அவையின் அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்தது. 

தற்போது, நூறாண்டுகளாக அமலில் இருக்கும் சட்டத்துக்குப் பதிலாக புதிய நிலம் கையகப்படுத்துதல் மசோதா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மக்களவையில் இந்த மசோதா கடந்த வாரம் நிறைவேறியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் வாக்களித்தது. எனினும், முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. வும் பகுஜன் சமாஜும் மசோதாவை ஆதரித்து வாக்களித்திருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்