முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்றில் ஒரு பங்கு எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 4 - தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் வழக்குகளை சந்தித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம், நாடு தழுவிய ஆய்வை மேற்கொண்டது. அதன் அறிக்கை டெல்லியில் வெளியிடப்பட்டது. ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையிலும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது வெளியிடப்பட்டது.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல், பல்வேறு மாநிலங்களில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு போட்டியிட்ட 62,847 வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆராயப்பட்டது. அவர்களில் 11,063 பேர் (18சதவீதம்) தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அறிவித்துள்ளனர். 5,253 பேர் (8சதவீதம்) மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. தற்போதுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில், 162 பேர் (33சதவீதம்) கிரிமினல் வழக்குகளையும், 76 பேர் கடுமையான கிரிமினல் வழக்குகளையும் சந்தித்து வருகின்றனர்.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களில், நாடு முழுவதும் 1,258 பேர் (31சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 23 சதவீதம் பேர் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. 12 சதவீதம் பேர் மீது மட்டுமே வழக்குகள் எதுவுமில்லை.

தேர்தலில் ஆள் பலமும், பண பலமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விஷயத்தில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. அனைத்துக் கட்சிகளிலும், கிரிமினல் வழக்குகளை சந்தித்து வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago