முக்கிய செய்திகள்

பின்லேடன் மனைவிகளை சந்திக்க அமெரிக்காவுக்கு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      உலகம்
Binladen-wife

 

வாஷிங்டன்,மே.11 - சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் மனைவிமார்கள் 3 பேர்களை சந்திக்க அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபோதாபாத் நகரில் சொகுசு பங்களாவில் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுகொலை செய்துவிட்டனர். அவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னர் அவனுடைய மனைவிமார்கள் 3 பேர்களை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் பின்லேடன் ஒளிந்திருந்தது அதுவும் அவன் ராணுவ பயிற்சி மையத்திற்கு அருகில் ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருந்தது அரசுக்கும் ராணுவத்துக்கும் தெரியாமல் இருக்காது என்றும் இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. மேலும் பின்லேடன் மனைவிமார்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. பின்லேடன் மனைவிமார்களிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் முதலில் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. பின்னர் அமெரிக்காவின் வற்புறுத்தலால் பாகிஸ்தான் தன்நிலையை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது. அதாவது பின்லேடன் மனைவிகளை அமெரிக்க அதிகாரிகளோ அல்லது பத்திரிகையாளர்களோ சந்தித்து பேட்டி எடுக்கலாம். ஆனால் பல்வேறு கேள்விகளை தயாரித்து அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. 

அமெரிக்காவின் பல்வேறு கோரிக்கைகளில் பின்லேடன் மனைவிமார்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும். இதில் ஓரளவு அமெரிக்காவின் கோரிக்கையை பாகிஸ்தான் முதல் கட்டமாக நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: