முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டோகிராபரை கற்பழித்தவர்கள் மீது பெண் புகார்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.4 - மும்பையில் உள்ள மகாலெட்சுமி மில்லில் பெண் போட்டோகிராபரை கற்பழித்தவர்கள் இந்த சம்பவத்துக்கு முன்பு என்னையும் கற்பழித்தனர் என்று ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதிலிருந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதுபோன்று பல கிரிமினல் குற்றங்களைச் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மும்பையில் உள்ள மகாலெட்சுமி மில்லுக்கு தனது ஆண் நண்பருடன் பெண் போட்டோகிராபர்  சென்றார். அப்போது அங்கு வந்த  சிலர் ஆண் நண்பரை கட்டிப்போட்டு விட்டு பெண் போட்டோகிராபரை கற்பழித்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் பெண் போட்டோகிராபரை  கற்பழித்தவர்கள்  என்னையும் கற்பழித்தனர் என்று கூறியுள்ளார். அவர்களைப் பற்றி இவர் புகார் கொடுத்ததை அடுத்து விவகாரம் வெளிச்சத்துக்கு  வந்துள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுபற்றி அந்த பெண் போலீஸாரிடம்  கூறியதாவது:

பத்திரிகை போட்டோகிராபரை கற்பழித்தவர்கள் தான் என்னையும்  மகாலெட்சுமி மில்லில்  வைத்து கடந்த ஜூலை மாதம் கற்பழித்தனர். அவர்களது செயல் மிருகத்தனமானது. பத்திரிகையாளரை கற்பழித்தவர்கள்தான் என்னையும் கற்பழித்தனர் என்பது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. எனவே நான் இதுபற்றி ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன் என்றார்.  கடந்த 6 மாதங்களாக நாங்கள் பலரை கற்பழித்துள்ளோம் என்று மும்பை போலீஸார் விசாரணை நடத்தியபோது இவர்கள் தெரிவித்துள்ளனர். என்னை கற்பழித்த 5 பேரில் இந்த சிறுவனும் உண்டு என்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி மகாலெட்சுமி மில்லுக்கு தனது ஆண் நண்பருடன் சென்ற பெண் போட்டோகிராபரை 5 பேர் கொண்ட  கும்பல் கற்பழித்தது. கற்பழித்தவர்கள் சலீம் அன்சாரி, விஜய், ஜதாவ், முகமது காசிம், கபிஷ் ஷேக் என்ற காசிம் சிராஜ் ரஹ்மான்கான் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago