முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மை கண்டறியும் சோதனைக்கு ஆ.ராசா மறுப்பு: சிபிஐ

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, செப். 5 - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுகீட்டு ஊழல் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மறுத்துவிட்டதாக அவரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரி டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ. ராசா, 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் 2011 பிப்ரவரி 17-ந் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ துணை கண்காணிப்பாளரான ராஜேஸ் சஹால் இன்று சாட்சியமளித்தார். அப்போது 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆ. ராசாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான மெமோ கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இந்த மெமோவில் ஏ என்ற இடத்தில் கையெழுத்திட்டிருப்பது நான். பி என்ற இடத்தில் கையெழுத்திட்டிருப்பது ஆ. ராசா என்றார். சிபிஐ விசாரணை தலைமை அதிகாரியான விவேக் பிரியதர்ஷிக்கு 2010 அக்டோபர் மாதம் முதல் உதவியாக செயல்பட்டவர் ராஜேஸ் சஹால். இந்த வழக்கில் தற்போதுதான் சிபிஐ அதிகாரி ஒருவர் முதல் முறையாக சாட்சியம் அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலம் இன்றும் பதிவு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்