முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோப்புகள் மாயம்: பிரதமரின் பேச்சுவார்த்தை வீண்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, செப். 5 - நிலக்கரி ஊழல் வழக்கின் கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் வைத்த இரவு விருந்துப் பேச்சுவார்த்தை வீணாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று விருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்த பாஜக திட்டவட்டமாக கூறி விட்டது. நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடைய முக்கியக் கோப்புகள் மாயமான விவகாரம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பி வருகிறது பாஜக. இன்றும் கூட இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. இந்த நிலையில் இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டுவதற்காகவும், நாடாளுமன்றம் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியும் நேற்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். இதில் மூத்த பாஜக தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் போன்றோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது நாடாளுமன்றம் சுமூகமாக இயங்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் ஓய்வூதிய மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை பிரச்சினையின்றி நிறைவேற்ற உதவிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் பின்வாங்குவதில்லை என்று பாஜக அறிவித்துள்ளது. அதன்படியே இன்றும் நாடாளுமன்றத்தில் அக்கட்சி பிரச்சினை கிளப்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்