முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், செப் 6 - டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984 -ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் சிக்கிய தமது கட்சியினரை காப்பாற்ற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 1984-ஆம் ஆண்டு டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு  அளித்ததாக கூறி , தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது சீக்கியர்களுக்கான நீதி உரிமை பெறும் அமைப்பு (எஸ்.எஃப்,ஜே) மற்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஏறக்குறைய 30-ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்கு, சோனியாகாந்திக்கு இப்போது நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக எஸ்.எஃப்.ஜே அமைப்பினர் கடந்த காலங்களில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சர் கமல்நாத் உள்பட முக்கிய இந்தியத் தலைவர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்