முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒதுக்கீட்டில் முறைகேடு: பிரதமரிடம் விரைவில் விசாரணை

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப் 6 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விரைவில் சி.பி.ஜ விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஊழல் ஸ்பெக்டரம் ஊழலாகும் . இந்த ஊழல் பற்றி வெளியானபோது இந்த உலகமே அதிர்ச்சியடைந்தது. இந்த ஊழலையும் மிஞ்சிவிட்ட ஊழல்தான் நிலக்கரி சுரங்க ஊழல். காரணம் நிலக்கரி ஒதுக்கீட்டு முறைகேட்டால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.86 லட்சம் கோடியாகும். இந்த ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் 2006 முதல் 2009 வரை நிலக்கரி துறையை தன்வசம் வைத்திருந்தார். அப்போது தான் பல நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான சில கோப்புகளும், ஆவணங்களும் காணமல்போயின. இது பற்றி பாராளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் பேசாத நாளே இல்லை. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் 10 நிமிடம் விளக்கமளித்தார். அப்போது கூறிய அவர் இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார்.

 ஆனால் பிரதமரின் விளக்கத்தை எதிர்கட்சிகள் ஏற்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் தப்பிக்கப்பார்க்கிறார் என்று பா.ஜ.க குற்றம்சாட்டியது. அர்த்தமற்ற விளக்கத்தை கூறிவிட்டு பிரதமர் போய்விட்டார் என்று அ.தி.மு.க எம்.பி மைத்ரேயன் குற்றம் சாட்டினார். இந்நிலையில் பிரதமர் சி.பி.ஜ முன்பு தானாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் பிரதமரிடம் சி.பி.ஜ விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முறைகேட்டை விசாரிக்கும் அதிகாரிகளில் ஒருவர் இது தொடர்பாக பிரதமரிடம் சி.பி.ஜ விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். இதை சி.பி.ஜ இயக்குனரும் மறுக்கவில்லை. எனவே வெகு விரைவில் பிரதமரிடம் சி.பி.ஜ விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது பிரதமர் ரஷ்யாவில் உள்ளார். அவர் வந்ததும் விசாரணை நடக்கலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago