முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: அரை இறுதியில் நடால் - அசரென்கா

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், செப் 6 - கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.  உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2010-ம் ஆண்டு சாம்பியனுமான ரபெல்நடால் (ஸ்பெயின்) கால் இறுதி ஆட்டத்தில் சகநாட்டைச் சேர்ந்த 19-ம்நிலை வீரர் டோமிராபர்ட்டோவை எதிர்கொண்டார். இதில் நடால் 6-0,6-2,6-2, என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 40நிமிட நேரம் தேவைப்பட்டது. 12 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற நடால் அமெரிக்க ஓபன் போட்டியில் 5-வது முறையாக அரை இறுதியில் நுழைந்துள்ளார். டோமி ராபர்ட்டோ 4 -வது சுற்றில்  ரோஜர் பெடரரை அதிர்ச்சிகரமாக தோற்கடித்து இருந்தார். ஆனால் நடாலுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் அவரால் ஒரு செட்டை கூட வெல்ல முடியாமல் போனது பரிதாபமே. 4-ம் நிலை வீரரான டேவிட்பெரர்(ஸ்பெயின்) கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பிரான்சை சேர்ந்த ரிச்சர்டு கேஸ்கியூட் 6-3,6-1,4-6,2-6,6-3 என்ற செட் கணக்கில் பெரரைவீழ்த்தி முதல் முறையாக அரை இறுதியில் நுழைந்தார். 

  அரை இறுதி ஆட்டத்தில் நடால்-கேஸ்கியூட் மோதுகிறார்கள். மற்றொரு அரை இறுதியில் மோதும் வீரர்கள் நேற்று நள்ளிரவில் தெரியும். ஜோகோவிச் - முர்ரே மோத வாய்ப்பு உள்ளது. இரண்டாம் நிலை வீராங்கனையான விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்) கால் இறுதியில் சுலோவாக்கியாவை சேர்ந்த டேனிலா ஹனுசோவாவை எதிர் கொண்டார். இதில் அசரென்கா 6 -2, 6 -3, என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரை இறுதியில் பிளாவியா பெனட்டாவை (இத்தாலி) எதிர்கொள்கிறார். பெனட்டா கால் இறுதியில் 6 -4, 6 -1, என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த ராபர்ட்டோ வின்சியை தோற்கடித்தார். மற்றொரு அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் ( அமெரிக்கா) லீ நா (சீனா) மோதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago