முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ஹஜ் பயணத்திலிருந்து விலகும் இந்தியர்கள்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

துபாய், செப்.6 - இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மெக்காவில் ஹஜ் நிறுவனங்களின் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்திய யாத்ரீகர்கள் பலர் ஹஜ் பயணத்திலிருந்து பெரும் அளவில் விலகிக் கொள்வதாக ஊடகம் ஒன்றின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய ஹஜ் பயணிகள் பலர் மத்திய ஹஜ் குழு பட்டியலில் பெயர்களை அறிவித்த பின்னர் விலகிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.

ஆந்திரபிரதேசத்திலிருந்து, ஹஜ் புனிதப் பயணம் செல்ல இருந்த யாத்ரீகர்களில் 400 பேர் செலவுகளை காரணம்காட்டி அப்பயணத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆண்டு மொத்தம் 1,36,020 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களில் 1,23, 511 பேர் மத்திய ஹஜ் குழு மூலமும், 34,005 பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமும் வரஉள்ளனர்.

இந்த ஹஜ் பயணிகள் தங்குவதற்காக மெக்காவில் இரண்டு வகையான விடுதி பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று அஸீஸ் எனப்படும் குறைந்த செலவினானது. மற்றொன்று அதிக செலவிலான பசுமை எனப்படும் பிரிவு. பசுமைப் பிரிவின் கீழ் ரூ.1,78, 800 செலுத்த வேண்டும். இது கடந்த ஆண்டு ரூ.1,64,905 ஆக இருந்தது. அஸீஸ் வகைப் பிரிவில் இந்த ஆண்டு ரூ.1,49,450 செலுத்த வேண்டும். இது கடந்த ஆண்டு ரூ.1.36,264 ஆக இருந்தது.

பெரும்பாலான இந்தியர்கள் மத்திய ஹஜ் குழு மூலம் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஹஜ் பயணம்செல்வதற்கான தொகையை இரு தவணைகளாக செலுத்த தவணை கேட்டிருந்தனர். பிற நாடுகளில் விமான கட்டணத்தின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் மானியத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு விமான கட்டணமாக ரூ.20 ஆயிரம்பெறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.28 ஆயிரமாக விமானக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago