முக்கிய செய்திகள்

பின்லேடன் நோய்வாய்ப்பட்டு இறந்தார் - ஈரான் புதிய தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      உலகம்
Heidar-Moslehi

ஈரான்,மே.11 - உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாதி பின்லேடன் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்ற புதிய தகவலை ஈரான் மந்திரி ஹைதர் மோஸ்லேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொல்லவில்லை. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதற்கான நம்பகத்தகுந்த மிக சரியான தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மையிலேயே அவரை அமெரிக்க ராணுவம் கைது செய்திருந்தாலோ, அல்லது கொன்று இறந்தாலோ அவரது உடலை ஏன் காட்டவில்லை. அவரது உடலை கடலில் ஏன் வீச வேண்டும். எனவே இந்த செய்தி அமெரிக்காவின் அப்பட்டமான பொய்யாகும். அந்நாட்டில் நிலவும் உள்நாட்டு பிரச்சினையை திசை திருப்பவே வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்லேடன் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை பரப்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: