முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகனுக்கு நீதிமன்ற காவல் 20-ம் தேதி வரை நீடிப்பு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

ஐதராபாத்,செப்.7 - முறைகேடாக முதலீடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் உள்பட பலருக்கு நீதிமன்ற காவல் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா லோக்சபை தொகுதி எம்.பி.க்கு சொந்தமான கம்பெனிகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது மற்றும் அளவுக்கு மீறி சொத்துகுவிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒய்.எஸ். ஆர் கட்சி தலைவர் ஜெகன்மோகன், அவரது ஆடிட்டர் விஜய் சாய் ரெட்டி, மோடிதேவி வெங்கட ரமணா ராவ் உள்பட முன்னாள் அமைச்சர்கள் 3 பேர், தொழிலதிபர் நிம்ம கட்ட பிரசாத், அதிகாரி பிரமாணந்த ரெட்டி மற்றும் பலர் கைது செய்யப்பட்டு சன்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். 

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிக்கப்படுவதை எதிர்த்து சிறையில் ஜெகன்மோகன் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல் மோசமடையவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பின்னர் அவர் மீண்டும் சன்சல்குடா சிறைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று அவரை கோர்ட்டில் ஆஜரப்படுத்த போலீசார் அழைத்து வந்தபோது கோர்ட்டு முன்பு கூடியிருந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் , தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் போட்டனர். அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கடந்தாண்டு மே மாதம் ஜெகன்மோகன் கைது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்