முக்கிய செய்திகள்

ஸ்பெக்ட்ரம் வழக்கு - தீர்ப்பை ஒத்தி வைத்தது ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      ஊழல்
delhi-high-court1

 

புது டெல்லி,மே.11 - 2 ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கார்பரேட் நிறுவனங்களை சேர்ந்த 5 அதிகாரிகளின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது. 2 ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா தவிர ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த 3 அதிகாரிகளும், ஸ்வான் டெலிகாம் இயக்குனர் மற்றும் யுனிடெக் சஞ்சய் சந்திரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி அஜித் பாரிஹேக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது கடந்த பல நாட்களாக இந்த வழக்கு நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் சில விவரங்களுடன் நீங்கள் வருகிறீர்கள். இதனால் வழக்கு மிகவும் தாமதமாகிறது. நீங்கள் விரும்பினால் வழக்கை செப்டம்பருக்கு ஒத்தி வைக்கிறேன் என்று நீதிபதி கூறினார். இதையடுத்து விசாரணை முடிவுக்கு வந்தது. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி பாரிஹோக் ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: