முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க்,செப்.7 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 3 -நிலை வீரரும் 2012-ம் ஆண்டு சாம்பியனுமான ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து), வர்னிகா (ஸ்விஸ்) ஆகியோர் மோதினர். இதில் ஆன்டி முர்ரே 4-6,3-6,2-6 என்ற செட் கணக்கில் வர்னிகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரால் ஒரு செட் கூட கைப்பற்ற முடியவில்லை. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஒன்றாம் நிலை வீரர் ஜோகோவிக்(செர்பியா) யூசேன்(ரஸ்யா) ஆகியோர் மோதினர். இதில் ஜோகோவிக் 6-3,6-2,3-6,6-0  என்ற செட் கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறினார். அரை இறுதிப்போட்டியில் ரெபேல் நடால்(ஸ்பெய்ன்) கேஸ்கியூட் (பிரான்ஸ்) ஆகியோர் மோதுகிறார்கள். மற்றொரு அரையிறுதியில் ஜோகோவிக், வர்னிகா மோதுகிறார்கள். பெண்கள் ஒற்றையர் ஜோடியில் அரை இறுதி ஆட்டங்களில் அசரென்கா, (பெலாரஸ்) பென்னெட்டா(இத்தாலி) செரினா வில்லியம்ஸ்(அமெரிக்கா) லீனா(சீனா) மோதுகின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதிப்போட்டியில் இந்தியாவின் லியான்டர்பயஸ், செக். குடியரசின் ஸ்டெபானக் ஜோடி ஒன்றும், நிலை ஜோடியான அமெரிக்காவின் பாப்பிரெயன் -மைக் ரெயன் ஜோடி எதிர்கொள்கிறது. இதில் லியான்டர் ஜோடி 3-6,6-2,6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

இறுதிப்போட்டியில் பயஸ் ஜோடி ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் பியா, பிரேசிலின் புருலோ சோரர்ஸ் ஜோடியை சந்திக்கிறது. கடந்த 2012 ம் ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் லியான்டர் பயஸ் , ஸ்டெபானக் ஜோடி பிரெயன்  ஜோடியிடம் தோல்வி கண்டது.அதற்கு தற்போது பழி தீர்த்துக்கொண்டது. 

பெண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா, சீனாவின் ஜீசெங் ஜோடி ஆஸ்திரேலியாவின் ஆஸ்லெபார்டி - டெல்லிக் குவாவை எதிர்கொண்டது. இதில் சானியா ஜோடியை 6-2,6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியா ஜோடி வீழ்த்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago