முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய அணி அறிவிப்பு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.8 - ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 22 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுஷீல்குமார், அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால் அவர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியவில்லை என்றால் அவருக்கு மாற்றாக அருண்குமார் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்வேன் என்று சுஷீல் உறுதியாக தெரிவித்துள்ளார். 

ஹங்கேரியில் வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. 3 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெறும். இதில் 7 எடைப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு எடைப்பிரிவுக்கும் ஒரு வீரர் என்ற முறையில் 21 வீரர்கள் (மாற்று வீரருடன் சேர்த்து 22) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago