முக்கிய செய்திகள்

மரணமடைந்த டோர்ஜி உடல் 10 நாட்களுக்கு பிறகு தகனம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      இந்தியா
DorjeeKhandu

தவாங்,மே.11 - ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முதல்வர் டோர்ஜி காண்டூ உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டரில் சென்றுகொண்டியிருந்தபோது விபத்து ஏற்பட்டதில் பலியானார். அதேமாதிரி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசலப்பிரதேச மாநில முதல்வர் டோர்ஜி காண்டூ கடந்த 11 நாட்களுக்கு முன்பு ஹெலிகாப்டரில் சென்றுகொண்டியிருந்தபோது விபத்து ஏற்பட்டதில் பலியானார். அவருடன் சென்ற விமானி உள்பட 4 பேரும் பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் பலியான டோர்ஜி உடல் 4 நாட்களுக்குப்பிறகு கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. அவரது உடல் இறுதி மரியாதைக்காக இதாநகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் டோர்ஜியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. தவாங் மாவட்டத்தில் உள்ள ஷெப்டங் என்ற இடத்தில் டோர்ஜி காண்டூ உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. தகன நிகழ்ச்சியில் முதல்வர் ஜர்போம் கேம்லின், அவரது அமைச்சர்கள், சபாநாயகர் வாங்லின் லோவாங்டோங் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தானிராம் ஷந்தில்,சஞ்சய் பாப்னா, எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: