முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்கியாவில் பிறந்தவர் பாகிஸ்தான் அதிபராகிறார்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.8 - இந்கியாவில் பிறந்த மம்நூன் உசேன் பாகிஸ்தான் அதிபராகிறார். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. இதையடுத்து மம்நூன் உசேன் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானில் மக்களாட்சியை விட ராணுவ ஆட்சியே அதிக ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்கள் ஆட்சியை நிறைவு செய்வதற்கு முன்பே ராணுவத்தால் பதவி இறக்கம் செய்யப்பட்டனர். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பதவிக்காலம் முழுவகையும் நிறைவு செய்ய உள்ளார். இது பாகிஸ்தான் வரலாற்றில் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்  கட்சியைச் சேர்ந்த மம்நூன் உசேன் பாகிஸ்தான் அதிபராக திங்கள்கிழமை பதவியேற்கிறார். கடந்த

ஜூலை மாதம் பாகிஸ்தான் அகிபர் தேர்தல் நடைபெற்றது.இதில் நீதிபதி வாஜிஹீதீன், மம்நூன் உசேன் ஆகியோர் போட்டியிட்டனர். தற்போதையை அதிபர் ஜர்தாரி போட்டியிடவில்லை. இதில் வெற்றி பெற்ற மம்னூன் உசேன் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்தவர்.

1947-ல் பாகிஸ்தான் பிரிந்தபோது இவரது உருது பேசும் முஸ்லிம் குடும்பமும் பாகிஸ்தான் சென்றது. அகிபராகப் பதவியேற்கும் முன்பாக இவர் தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் பதவியை நிறைவு செய்த ஜர்தாரி என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பாகிஸ்தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பயங்கரவாதிகள் எதிர்ப்பு இருப்பதால் அவர் வெளிநாடு செல்வார் என்று தெரிகிறது.  அவர் கட்சி வலுவாக உள்ளதால்  அவர் பாகிஸ்தானில் இருந்து கட்சியை வலுப்படுத்துவார் என்று கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்