முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

200-வது டெஸ்டுக்குப் பிறகு டெண்டுல்கர் ஓய்வு பெற மாட்டார்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, செப். 8 - உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான டெண்டுல்கர் 200- வது டெஸ்டுக்குப் பிறகு, ஓய்வு பெறுவார் என்று அனைவ ராலும் கருதப்படுகிறது. ஆனால் டெலிவிசன் வர்ணனையாள ரும் முன்னாள் கேப்டனுமான ரவி சா ஸ்திரி டெண்டுல்கர் எந்த நேரத்திலும் ஓய்வு பெற மாட்டார் . அவர் தொடர்ந்து விளையாடுவார். அவர் அடுத்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடை பெறும் டெஸ்டில் கலந்து கொள்வார். 

இந்திய கிரிக்கெட்வாரியத்தின் செயல் பாடு சிறப்பாக உள்ளது. சிறந்த நிர் வாகத்தைக் கொண்டது கிரிக்கெட் வா ரியம். என். ஸ்ரீநிவாசன் சிறந்த நிர்வா கியாவார். 

அவர் திறமையான விளையாட்டு ஆர் வலர் . அவரது பங்களிப்பு மகத்தானது . இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்தியாவின் நட்சத்திர  கிரிக்கெட் வீர ரான டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தும், அதிக ரன் குவித்தும் சாத னை படைத்து இருக்கிறார். தவிர, பல் வேறு சாதனைகளையும் புரிந்து தன்னி கரற்ற வீரராகத் திகழ்கிறார். 

மேலும் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மும்பை வீரரான டெண்டுல்கர் கடந்த 21 ஆண்டுக்கும் மே லாக சர்வதேச போட்டிகளில் ஆடி வரு கிறார். 

தற்போது 200 -வது டெஸ்டில் ஆட இரு க்கிறார். இதற்காக மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் போட்டியிட்டு வருகின்றன. 

கடந்த சில ஆண்டுகளாகவே டெண்டு ல்கர் இந்தத் தொடருடன் ஓய்வு பெறு வார், அந்தத் தொடருடன் ஒய்வு முடி வை அறிவிப்பார் என்று யூகங்கள் கிள ம்பி வருகின்றன. 

ஆனால் ஓய்வு முடிவு குறித்து அவசரப் படமாட்டேன். ஓய்வு பெற வேண்டும் என்று எனக்கு தோன்றும் போது தான் நான் ஓய்வு பெறுவேன் என்று சச்சின் கூறிவருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்