முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: இறுதிச்சுற்றில் செரீனா - அசரென்கா

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 8 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பி யன் பட்டத்தைக் கைப்பற்ற செரீனா வில்லியம்ஸ் மற்றும் அசரென்கா இரு வரும் பலப்பரிட்சை நடத்த உள்ளனர். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த இரண்டு வார கால மாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இது தற்போது விறுவிறுப் பான கட்டத்தில் உள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டம் ஒன்று நேற்று காலை நடைபெற்றது. இதில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் சீன வீராங்கனை லீநா இருவரும் மோதினர். 

இதில் உலகின் முதல் நிலை வீராங்க னையான செரீனா அபரமாக ஆடி, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனையான லீநாவை எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன் னேறினார். 

நடப்பு சாம்பியனான செரீனா 6 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இரு க்கிறார். இதில் 3 முறை அவர்  இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறார். 

மற்றொரு அரை இறுதி ஆட்டம் ஒன்றி ல் பெலராஸ் வீராங்கனை விக்டோரி யா அசரென்காவும், இத்தாலி வீராங்க னையும் மோதினர். 

இதில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான அசரென்கா 6 -4, 6 -2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை பிளவியா பெனட்டாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

இறுதிப் போட்டியில் சாம்பியன் கோ ப்பையைக் கைப்பற்ற அமெரிக்க நட்சத்திர வீராங்கனையான செரீனா வில் லியம்சும், பெலாரஸ் வீராங்கனையா  ன அசரென்காவும் மோத உள்ளனர். 

மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதி யில் அமெரிக்காவின் செரீனா மற்றும் வீனஸ் ஜோடி 4 -6, 2 -6, என்ற செட் கணக்கில் செக். குடியரசின் அன்ட்ரி யா ஹவக் மற்றும் லூசி ஹெரடக்கா இணையிடம் தோல்வி அடைந்தது. 

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி க்கு நம்பர் - 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிக், சுவிட்சர்லாந்தின் வாவ் ரிங்கா, 2-ம் நிலை வீரரான நடால், பிரான்சின் ரிச்சர்டு காஸ்ட் ஆகியோர் தகுதி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்