முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: இறுதிச்சுற்றில் ஜோகோவிக் - நடால்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், செப். 9  - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்ற உலக நம்பர் - 1 வீரரான ஜோகோவிக்கும், ரபேல் நடாலும் பலப்பரிட்சை நடத்த உள்ளனர். 

இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த 2 வார காலமாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களதத்தில் குதித்து உள்ளனர். இது தற்போது இறுதிக் கட்ட த்தை அடைந்து உள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர். 

முன்னதாக நடந்த அரை இறுதி ஆட்ட த்தில் செர்பிய வீரரான ஜோகோவிக் மற்றும் ஸ்பெயின் வீரரான ரபேல் நடால் இருவரும் வெற்றி பெற்று இறு திச் சுற்றுக்கு முன்னேறினர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிக்கும், சுவிஸ் வீரர் வாவ்ரி ங்காவும் மோதினர். 

இந்த ஆட்டத்தில் 2-6, 7-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 4 மணி நேரம் போராடி ஜோகோவிக் சுவிஸ் வீரரை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு அரை இறுதியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், பிரான்சின் ரிச்ச ர்டு காஸ்கட்டும் மோதினர். 

இதில் நடால் அபாரமாக ஆடி, 6-4, 7-6, 6-2, என்ற செட் கணக்கில் காஸ்கட்டை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தார். 

சாம்பியன் கோப்பை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் ஜோகோவிக்கும், நடாலும் பலப்பரிட்சை நடத்துகின்றனர். 

மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற் றில், செக். குடியரசின் அன்ட்ரியா - லூ சி ஜோடி 6-7, 6-1, 6-4 என்ற செட் கணக் கில் ஆஸி.யின் அஸ்லேக் பார்லி மற்று ம் கசே டெல்லாகுவா இணையை வீழ் த்தி பட்டம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்