சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம்: நாசா அனுப்பியது

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப். 9 - சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாசா மையம் அனுப்பி உள்ளது. சந்திரனின் வான வெளி குறித்தும் அதை சுற்றிலும் பூசுதல் மிதப்பது குறித்தும் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மைய விஞ்ஞானிகள் லாடி என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பி உள்ளனர். அது வெர்ஜீனியா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் ரோபோ மூலம் இயங்கும் சிறிய கார் வடிவில் உள்ளது. இதை கலிபோர்னியாவில் உள்ள நாசா ஆராய்ச்சி மைய இயக்குனர் பீட்டர் வேர்டன் தயாரித்துள்ளார். 

இது வருகிற அக்டோபர் மாதம் 6 ம் தேதி சந்திரனை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது தனது ஆய்வை தொடங்கும். அங்கிருந்து தகவல்களையும் போட்டோக்களையும் பூமிக்கு அனுப்புகிறது. ரூ. 1,900 கோடி செலவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 மாத ஆய்வுக்கு பின் லாடி சந்திரனிலேயே தன் வாழ்வை முடித்துக் கொள்ளும். பூமிக்கு திரும்பாது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: