முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே துறையில் ரூ.5 லட்சம் கோடி முறைகேடு

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, செப்.10 - காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங் ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியத ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல். அதேபோல் 1.80 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஊழல் நிலக்கரிச்சுரங்க ஊழல். இதில் பிரதமர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ள்து. இதனால் அவர் சி.பி.ஐ. முன் ஆஜராக வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது. சி.பி.ஐ. முறைப்படி கோரினால் பிரதமர் ஆஜர் ஆவார் என்று மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தற்போது இந்த ஊழல்களை மிஞ்சும் வகையில் ஒரு மெகா ஊழல் நடந்துள்ளது. அதாவது ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள நிலத்தை தனியாருக்கு குத்தகை விட்டதில் ரூ.5 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு குத்தகைக்கு விட்டதில் 50 ஆயிரம் கோடி தான் கிடைத்துள்ளது. ஆனால் 5 லட்சம் கோடி கிடைத்திருக்க வேண்டும். குறைந்த கட்டணத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்று முக்கிய பிரமுகர் ஒருவர் டெல்லியில் தெரிவித்தார். மேலும்  மன்மோகன்அரசு ஊழலின் மொத்த உருவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்