முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: லியாண்டர் பயஸ் ஜோடி சாம்பியன்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், செப்.10 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யின் ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடியும், மகளிர் ஒற்றை யர் பிரிவின் இறுதிச் சுற்றில் உலக நம் பர் - 1 வீராங்கனையான செரீனா வில் லியம்சும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் செரீனா 17 -வ து முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்ட ம் வென்று சாதனை படைத்து இருப்ப து குறிப்பிடத்தக்கது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் அமெரிக்க முன்னணி வீராங்க னையான செரீனா, பெலாரஸ் வீராங் கனை அசரென்காவை வீழ்த்தி பட்டத் தை தனது வசமாக்கினார். 

இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் கடந்த 2 வார காலமாக முக்கிய நகர மான நியூயார்க்கில் நடைபெற்றது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்தனர். இது இறு திக் கட்டத்தை அடைந்து விட்டது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர். 

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறு திச் சுற்று ஆட்டம் நேற்று அதிகாலை நடந்தது. இதில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் அசரென்கா இருவரும் மோ தினர். 

இதில் செரீனா 7-5, 6-7(8), 6-4 என்ற செ ட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

இந்த வெற்றியைப் பெற செரீனாவுக்கு 2 மணி நேரம் 14 நிமிடம் தேவைப்பட்டது. இதில் பெலாரஸ் வீராங்கனையும் வெற்றிக்காக கடுமையாக போராடி னார். 

1989-ம் ஆண்டிற்குப் பிறகு, அமெரிக்க ஓபன் போட்டியில் அதிக நேரம் நீடித்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி இது தான் என்பது நினைவு  கூறத்தக்க து. 

மேலும் அமெரிக்க ஓபன் பட்டத்தை அதிக வயதில் வென்றவர் என்ற சாத னையையும் செரீனா படைத்து இருக்கிறார். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின்

லியாண்டர் பயஸ் மற்றும் செக். குடிய ரசைச் சேர்ந்த ரேடக் ஸ்டீபானிக் ஜோ டியும், ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் மற்றும் பிரேசிலின் புருனோ இணையும் மோதின. 

இதில் பயஸ் ஜோடி 6-1, 6-3, என்ற நேர் செட்டில் ஆஸ்திரிய மற்றும் பிரேசில் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத் தை கைப்பற்றி சாதனை படைத்தது. 

பயசுக்கு இது 8 -வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். ஒட்டு மொத்தமாக கிரா  ண்ட் ஸ்லாம் போட்டியில் 14 பட்டங் களை கைப்பற்றியுள்ளார். மேலும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை 3-வது முறையாக தற்போது கைப்பற்றி இருக்கிறார். 

2006 -ம் ஆண்டு செக். வீரர் மார்டின் டாமுடன் ஜோடி சேர்ந்து வெற்றி பெற்றார். 2009 -ம் ஆண்டு செக். வீரர் லூகா சுடன் ஜோடி சேர்ந்து பட்டத்தை கைப் பற்றினார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற் றில் 40 வயதில் பட்டம் வென்ற வீரர் கள் பட்டியலில் பயஸ் இடம் பிடித் தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்