முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள்: ஆஸ்தி., 88 ரன் வித்தியாசத்தில் வெற்றி

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், செப். 10 - இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய  அணிகளுக்கு இடையே 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டி ஓல்டு டிராபோர்டில் நடந்தது. முன்னதாக இதில் டாஸ் வெ ன்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்தி ரேலிய வீரர்கள் மார்சும், பிஞ்சும் தொ டக்க வீரர்களாக களம் இறங்கினர். 

மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் வெளி யேறினார். பின்னர் பிஞ்சும், வாட்சனும் ஆடினர். பிஞ்ச் 45 ரன்னிற்கும், வாட்சன் 38 ரன்னிற்கும் ஆட்டம் இழந் தனர். 

அதன் பிறகு, கேப்டன் கிளார்க்கும், பெய்லியும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினர். 

கிளார்க் அபாரமாக ஆடி 102 பந்துக ளில் 104 5 ரன்னை எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 14 பவுண்டரிகள் அடங் கும். பெய்லி 67 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 4 சிக்ச ர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். 

ஆஸ்திரேலிய அணி இறுதியில் நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப் பிற்கு 315 ரன்கள் எடுத்தது. 

இங்கிலாந்து தரப்பில், பின், ரன்கின் , பொபாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், பிரட்வெல் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

பின்னர் 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி இறங்கியது. தொடக்க ஆட்டக் காரர்களாக பீட்டர்சனும், கார்பெரியும் களம் இறங்கினர். 

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமா ளிக்க முடியாமல் சொற்ப ரன்களிலே யே இங்கிலாந்து வீரர்கள் வெளியேறி னார்கள். கார்பெரி 4, டிராட் 0, பொ பாரா 1, ஸ்டோக்ஸ் 5 , பிரட்வெல் 1, பின் 16 ரன்னிற்கு வெளியேறினர். 

பீட்டர்சன் 60 ரன்னும், மோர்கன் 54 ரன் னும், பட்லர் 75 ரன்னும் எடுத்தனர். 44.2 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 88 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெ ற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கிளா ர்க் தேர்வு செய்யப்பட்டார். 3- வது ஒரு நாள் போட்டி பக்கிங்ஹாமில் நாளை (11-ம் தேதி) நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago