மதுரை முக்குறுணி விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.10 - விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். நேற்றுகாலை அனைத்து விநாயகர் கோயில்களிலும் விசேஷ பூஜை, அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விநாயகரை வழிபட்டனர். 

மதுரை முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தி அன்று முக்குறுணிஅரிசியால் ராட்சத கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வது வழக்கம். குறுணி என்றால் 6 படியாகும். முக்குறுணி என்பதால் 18 படி அரிசியால் ராட்சத கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நேற்றும் வழக்கம் போல் ராட்சத கொழுக்கட்டை மடப்பள்ளியில் செய்யப்பட்டு பகல் 11 மணி அளவில்  கோயில் பணியாளர்கள் அதனை கரும்பில் பிள்ளை கட்டி தூக்கி வருவதுபோல் தூக்கி வந்தனர். இந்த காட்சி பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருந்தது. பக்தர்கள் ஆச்சரியத்துடன் கொழுக்கட்டையைக் கண்டு பயபக்தியுடன் விநாயகரை தரிசித்தனர். கோயிலில் உள்ள வன்னிமரத்தடி பிள்ளையார், நர்த்தன விநாயகர், சித்தி விநாயகர் போன்ற அனைத்து விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

8அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் 4 கரங்களுடன் இருக்கும் முக்குறுணி விநாயகர் பார்க்க பார்க்க மீனாட்சி கோயிலில் பிரமாண்டமாக இருக்கிறார். இந்த பிரமாண்டமான சிலை கி.பி. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தனது மாபெரும் அரண்மனை (மஹால்) கட்டுவதற்காக மண் எடுக்க தெப்பக்குளத்தருகே தோண்டியபோது கிடைத்ததாக வரலாறு கூறுகிறது. இதனை திருமலை நாயக்கர் ஆணைப்படி கந்தபொடி பெத்து செட்டியார் என்பவர் பிரதிஷ்டை செய்துள்ளார். விநாயகர் சதுர்த்தியன்று வெள்ளியால் ஆன கிரீடம், அங்கி, மற்றும் கவசம் சாத்தப்பட்டு  பார்ப்பதற்கு வெள்ளி பிள்ளையார் போன்று தோன்றுவார். இக்காட்சி பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சி ஆகும். அதிகாலையிலேயே பூஜை, நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விபூதி, வெண்பொங்கல், கொழுக்கட்டை வழங்கினார்கள். பின்னர் 11 மணிஅளவில் ராட்சத கொழுக்கட்டை வந்ததும் நைவேத்தியம செய்யப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

இதேபோல் வீடுகளில் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், பழவகைகள் குறிப்பாக விலாம்பழம் ஆகியவை வைக்கப்பட்டு படையல் செய்தனர். உலகில் எல்லாமே மண்ணில் தோன்றி நீரில் கரைகிறது. இதனை உணர்த்தும் வகையில் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வாங்கப்பட்டு பூஜை செய்து  வழிபட்டு பின்னர் நீர்நிலைகஏளில் கரைக்கப்படுகிறது. இதனால் ஏராளமாதன பிள்ளையார்சிலைகள் விற்பனையானதுடன் பூஜை சாமான்களும் நேற்று முன்தினம் இருந்தே விற்பனை செய்யப்பட்டு வந்தது ஒரு களை கட்டிய அம்சமாக இருந்தது.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: