முக்கிய செய்திகள்

மரபணு சோதனைக்கு ஒத்துழைக்க என்.டி.திவாரிக்கு உத்தரவு

புதன்கிழமை, 11 மே 2011      இந்தியா
N D Tiwari

 

புதுடெல்லி,மே.11 - தகப்பன் உரிமை கோரி முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி மீது ஒரு இளைஞர் தொடர்ந்துள்ள வழக்கில் மரபணு சோதனைக்கு ரத்தம் கொடுக்குமாறு திவாரிக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆண்களில் செக்ஸ் ரீதியாக சவலப்புத்தி உள்ளவர்கள் பல பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துவிடுகிறார்கள். இதனால் ஒரு சில நேரங்களில் பல விபரீதங்கள் நடந்துவிடுகிறது. அதாவது செக்ஸ் உறவு கொள்ளும்போது சம்பந்த பெண்கள் கர்ப்பிணியாகிவிடுகிறார்கள். அந்த பெண்கள் வெளியே சொன்னால் கேவலம் என்று நினைத்து கருவிலேயே கொன்று விடுகிறார்கள். வேறு சில பெண்கள் சிசு கொலைக்கு பயந்து வேறு எங்கே தெரியாத இடத்திற்கு சென்று குழந்தையைப் பெற்று தனியாக வாழ்ந்து கஷ்டப்படுகிறார்கள். இந்த மாதிராயான சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடக்கின்றன. 

ஆந்திர மாநில கவர்னராக இருந்த என்.டி.திவாரி ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கினார். இவர் மத்திய அமைச்சராக பல முறை பதவி வகித்தவர். பின்னர் ஆந்திர மாநில கவர்னராக பதவி ஏற்றார். அப்போது அவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனையொட்டி அவர் கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்கு குடிபோய்விட்டார். அங்கேயும் ஒரு பிரச்சினை எழுந்தது. அதாவது 31 வயது இளைஞரான ரோஹித் ஷேகர் என்பவர், எனது தந்தை என்.டி.திவாரி என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீண்டுகொண்டே போகிறது. இளைஞர் ஷேகர் கூறியுள்ளது உண்மையா என்பதை அறியை சோதனைக்காக ரத்தம் கொடுக்க வருகின்ற ஜூன் 1-ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்திற்கு வரவேண்டும் என்று என்.டி.திவாரிக்கு டெல்லி ஐகோர்ட்டு இணை பதிவாளர் தீபக் கார்க் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வழக்கு தொடர்ந்துள்ள ரோஹித் ஷேகர் மற்றும் அவரது தாயார் உஜ்வாலா ஷர்மா ஆகியோர்களும் வந்து ரத்தம் கொடுக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. என்.டி.திவாரிக்கு தற்போது 85 வயதாகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்: