முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயண ஆயுதங்களை ஒப்படைக்க தயார்: சிரியா அறிவுப்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்,செப்.11 - ரசாயண ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்று சிரியா அறிவித்துள்ளது. இதனால் போர் பதட்டம் தணிந்துள்ளது. சிரியா மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.  ஈராக்கை அடுத்து எகிப்பது லிபியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் ஏவப்பட்டது. இதனையொட்டி லிபியா மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அதிபராக இருந்த லிபியா குண்டுவீசி கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் லிபியாவில் உள்நாட்டு கலவரம் முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பு எகிப்தில் அதிபர் முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டதால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து அதிபர் முபாரக் பதவியில் ராஜினாமா செய்தார். இருந்தபோதிலும் அந்த நாட்டில் இன்னும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் சிரியாவிலும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை அடக்க ராணுவம் ஏவப்பட்டது. போராட்டமானது உள்நாட்டு போராக மாறும் அபாயம் ஏற்பட்டது. போராட்டத்தை அடக்க முடியாத ராணுவமானது ரசாயண ஆயுதங்களை வெடிக்கச் செய்து அப்பாவி மக்கள் கொன்று குவித்தனர். அதனால் லிபியாவை தாக்கியதுபோல் சிரியா மீதும் தாக்கல் நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. சிரியாவில் ரசாயண ஆயுதங்கள் வீசி தாக்கப்பட்டது தொடர்பாக அறிந்துவர ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் சிரியா சென்று அனுப்பப்பட்டனர். அந்த குழுவினர் சிரியா சென்று ஆய்வு செய்து அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்ய உள்ளது. இதற்கிடையில் சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க செனட் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் செனட் உறுப்பினர்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதிபர் ஒபாமா கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிரியா மீது தாக்குதல் அறிவிப்பை அதிபர் ஒபாமா நிறுத்திவைத்தார். அதேசமயத்தில் சிரியா நாடானது ரசாயண ஆயுதங்களை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு கமிட்டி முன்பு ஒப்படைத்தால் அந்த நாடு மீது போர் தொடுக்க மாட்டோம் என்று அதிபர் ஒபாமா அறிவித்தார். அதே கோரிக்கையை ரஷ்யாவும் சீனாவும் வலியுறுத்தி வந்தன. இதற்கு சிரியா சம்மதித்துள்ளது. தங்களிடம் உள்ள ரசாயண ஆயுதங்களை ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு கமிட்டியிடம் ஒப்படைக்க தயார் என்றும் சிரியா அறிவித்துள்ளது. இதனையொட்டி சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கும் பதட்ட நிலை கொஞ்சம் தணிந்து இருப்பதோடு சிரியா நாட்டு மக்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். சிரியா மீது போர் தொடுப்பதற்காக செங்கடல் பகுதியில் விமானந்தாங்கி போர் கப்பல்களை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. 3 நாட்களுக்குள் போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையில் போர் பதட்டம் தணிந்து இருப்பதால் மேற்காசியா பகுதியில் அமைதி நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago