முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராட்சத வெள்ளை வைரம்: ரூ.230 கோடிக்கு ஏலம்?

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஹாங்காங்,செப்.12 - ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு ஒரு ராட்சத அளவிலான வைரக்கல் தோண்டி எடுக்கப்பட்டது. அது 299 காரட் எடை இருந்தது. பின்னர் அது பட்டை தீட்டப்பட்டபோது 118.28 காரட் ஆக மாறியது. வெள்ளை நிறத்தினால் ஆன அந்த வைரக்கல் பளபளவென ஜொலிக்கிறது. 

கோழி முட்டை வடிவத்தில் உள்ள இந்த வைரக்கல் ஹாங்காங்கில் உள்ள சோத்பி என்ற இடத்தில் வருகிற அக்டோபர் மாதம் ஏலம் விடப்படுகிறது. அப்போது அது ரூ. 200 கோடியில் இருந்து ரூ.238 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தகவலை சோத்பி ஏல மையத்தின் துணை தலைவர் கயக்கின்யிலோ லண்டனில் தெரிவித்தார். கடந்த ஆண்டு 101.73 காரட் எடையுள்ள வைரம் ரூ.180 கோடிக்கு ஏலம் போனது. அதுவே அதிக அளவில் ஏலம் போன வைரம் என கருதப்பட்டது. தற்போது இந்த வைரம் அதன் விற்பனை சாதனையை முறியடித்து கூடுதல் விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து 7.59 காரட் எடையுள்ள நீல நிற வைரமும் ஏலத்தில் விடப்படுகிறது. அது ரூ.140 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்