முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவில் 2014-ல் ஐ.பி.எல். போட்டி?

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, செப். 12 - கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்ததால், ஐ.பி.எல். போட்யை நடத்த போதிய பாதுகாப்பு வழங் க முடியாது என்று மத்திய அரசு அறிவி த்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி. எல். போட்டிகள் நடந்தன. 2014-ம் ஆண்டும் இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. 

வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ஐ.பி.எல். போட்டி நடை பெறும். அடு   த்த ஆண்டு இதே கால கட்டத்தில், தேர் தலும் நடைபெறும் என்று தெரிகிறது. 

இதனால் போட்டியை எங்கு நடத்துவ து என்பது குறித்து பி.சி.சி.ஐ. அதிகாரி கள் ஆலோசனை நடத்தி வருகிறார் கள். 

2009 - ஐப் போலவே 2014 லும் தென் ஆப்பிரிக்காவில் நடத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

என்றாலும், தற்போது இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே யான போட்டியில் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. 

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்க தலைமைச் சங்க அதிகாரி லோகார்ட்டுடன் கருத்து ரேறுபாடு ஏற்பட்டு உள்ளதால் தெ.ஆ. வில் ஐ.பி.எல். போட்டியை நடத்த அனுமதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. 

லோகார்ட்டுடன் உள்ள பிரச்சினையை பேசி தீர்க்கப்பட்டு விடும் என்று பி.சி. சி. ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

மேலும் அந்த அதிகாரி கூறுகையில், 2014 ஐ.பி.எல். போட்டியை வேறு நா  ட்டிலும் நடத்தும் சூழ்நிலை தற் போது ஏற்பட்டு உள்ளது. 

அவ்வாறு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தென் ஆப்பிரிக்கா தான் முதல் தேர்வாக இருக்கும் என்றார். 

இலங்கை, மலேசியா போன்ற சிறிய நாடுகளில் ஐ.பி.எல். போட்டியை நட த்தினால் வருமானம் பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. 

போட்டி நடக்கும் கால கட்டம் இங்கி லாந்தில் கடும் குளிர் என்பதால் அங் கும் போட்டியை நடத்த இயலாது என் று பி.சி.சி.ஐ. அதிகாரி கருத்து தெரி வித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தலால் ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்தி ய அரசு அறிவித்தால், இந்தியாவிலே யே போட்டியை நடத்தி பாதுகாப்பு கொடுக்க முடியாது. 

போட்டியை மட்டும் இலங்கையில் நடத்தலாம் என்று ஒரு சில பி.சி.சி.ஐ. அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்