முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவிடம் அமெரிக்க கோர்ட் சம்மன் வழங்கப்பட்டது

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

நியூயார்க், செப்.13 - அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்கி இருந்த சோனியா காந்தியிடம் அமெரிக்க கோர்ட் பிறப்பித்த சம்மன் வழங்கப்பட்டது. இதற்கு இம்மாதம் 30-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் சுலோன் கேட்டரிங் என்ற மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதம் நடந்தபோது அவருக்கு  உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிசைபெற்றார். பின்னர் இம்மாதம் 2-ம் தேதி சிகிச்சைபெறுவற்காக அவர் மீண்டும் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மகள் பிரியங்காவும் உடன் சென்றார்.  நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் சுலோன் கேட்டரிங் என்ற மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. 

   1984-ம் ஆண்டு இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இதையடுத்து அமெரிக்த கோர்ட்டில்  நீதிக்காக சீக்கியர்கள் என்ற அமைப்பு சார்பாக தொடரப்பட்ட வழக்கில் 3-ம் தேதி சம்மன் அனுப்ப அமெரிக்க கோர்ட்டு நீதிபதி கோஹன் உத்தரவு பிறப்பித்தார். நேரடியாக சம்மனை வழங்க முடியாவிட்டால் நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் சுலோன் கேட்டரிங் மருத்துவமனை நிர்வாகிகள், ஊழியர்கள் அல்லது பாதுகாவலர்கள் மூலம் சம்மனை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மருத்துவமனையில் சோனியா காந்தி தங்கி இருந்தபோது, நர்சிங் சூப்பர் வைசர் ரூயிஸ் மூலம் சோனியாவிடம் சம்மன் கொடுக்கப்பட்டது.  இதுதொடர்பாக அவர் இம்மாதம் 30-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும். அவர் பதில் அளிக்கத் தவறினால் அவரது தரப்பு நிலைப்பாடு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமலேயே தீர்ப்பு அளிக்கப்படும் என்று சட்டத் துறை வட்டரரங்கள் தெரிவித்துள்ளன. 

   அமெரிக்க கோர்ட் அனுப்பிய சம்மனால் சோனியாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர்   அபிஷேக்சிங்வி தெரிவித்துள்ளார்.  சீக்கியர்கள் அமைப்பு இதுபோல் பிரகாஷ்சிங் பாதல், மத்திய மந்திரி கமல்நாத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி அமெரிக்க கோர்ட்டில் ஆஜராக வைக்க முயற்சி செய்தது. இந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்பது குறிப்டபித்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்